வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் மற்றும் திருக்காஞ்சி கோவில்களில் கார்த்திகை முதல் சோமவார விழா பூஜை நடந்தது.வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் அனந்தம்மாள் ஆதின தர்ம பரிபாலனம் சார்பில் கார்த்திகை மாத முதல் சோம வார விழா நேற்று நடந்தது.காலை 10:30 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு யாகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு தீபாராதனை, சுவாமி மாட வீதியுலா நடந்தது.அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார விழாவையொட்டி மாலை 4:3௦ மணியளவில் 1008 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது.