சூலூர்: பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. சூலூர் அடுத்த பொன்னாண்டாம் பாளையத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து, கடந்த, 10 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 12 நாள் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. காலை, கணபதி ஹோமத்துடன் சங்காபிஷேக பூஜை துவங்கியது, 108 சங்குகள் புனிதநீர் நிரப்பப்பட்டு, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சென்னியாண்டவருக்கு சங்காபிஷேகம் மற்றும் மகாதீபராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.