ஈரோடு: ஈரோடு சூரம்பட்டியில் கொங்கலம்மன் கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. ஈரோடு சூரம்பட்டி, நஞ்சப்பகவுண்டன் வலசில் கொங்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் சில வாரத்துக்கு முன் நடந்தது. நேற்று, 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று அதிகாலை கொங்கலம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாடும், யாகவேள்வியை, தொடர்ந்து, 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது. 108 வெண்சங்குகளில் புனித நீர் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின் கொங்காலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சூரம்பட்டி வட்டாரத்தை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.