கீழ்குந்தா கிராமத்தில் 14ம் தேதி தெவ்வப்பா திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2012 11:07
மஞ்சூர்: கீழ்குந்தா காடெஹெத்தை கோவிலில் வரும் 14ம் தேதி "தெவ்வப்பா திருவிழா நடக்கிறது. குந்தை சீமெயில் உள்ள 21 படுகரின கிராம மக்கள் இணைந்து கொண்டாடும் "தெவ்வப்பா திருவிழா கீழ்குந்தா காடெஹெத்தை கோவிலில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழாவுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மஞ்சூர் எச்.கே., டிரஸ்ட் கட்டடத்தில் நடந்தது. கூட்டத்தில், வரும் 14ம் தேதி "தெவ்வப்பா திருவிழா சிறப்பாக நடத்துவது;அன்றைய தினம் பல்வேறு கிராமங்களிலிருந்து வரும் திரளான மக்களை உபசரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு 14 ஊர் தலைவர் போஜன் தலைமை வகித்தார். குந்தை சீமெ பார்பத்தி அன்னமலை முருகேஷன், கீழ்குந்தா ஊர் தலைவர் வசந்தராஜன், லிங்காகவுடர் உட்பட அனைத்து ஊர் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். குந்தை சீமெயில் உள்ள 21 கிராம மக்கள் திரளாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். விழாவையொட்டி ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.