பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நிறைவடைந்து ஆறாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி காலை விக்னேஸ்வர பூஜையும், கலச பூஜையும், அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், மதியம் மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகர வர்த்தகர் சங்க தலைவர் பழனியாண்டி, மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் ராமலிங்கம், வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா தர்மராஜ் மற்றும் பிரதோச வழிபாட்டு குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோதண்டராமன், நிர்வாக அலுவலர் சூரியநாராயணன் மற்றும் தர்மபபரிபாலன சங்கத்தினர் செய்திருந்தனர்.