முத்துமாரியம்மன் அவதரித்த தினம்: பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2021 01:11
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும் பட்டாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மனின் அவதார தினம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் இருந்து 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஆண்டுதோறும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று 108 பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்தாலம்மன் கோயிலில் இருந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு பட்டு சேலைகள் மஞ்சள் சேலைகள் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது.