பழநி: பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர படிப்பதை,ரோப் கார், வின்ச் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் மூன்று வின்ச்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு ராக்கால பூஜை வரை தொடர்ந்து செயல்படும். தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முருக பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மூன்றாவது வின்சின் ரோப் மாற்றவும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ரோப் வராமலும் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்படாமலும் தொடர்ந்து தற்போது வரை மூன்றாவது வின்ச் செயல்படாமல் உள்ளது. பருவமழை பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பெய்வதால் ரோப்கார் சேவையும் அடிக்கடி தடைபடுகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வின்ச் சேவையில் இரண்டு வின்சகள் மட்டும் செயல்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரமும் அதிகரிக்கிறது. எனவே கோயில் நிர்வாகம் மூன்றாவது வின்ச் சேவையை மீண்டும் துவங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற கோரிக்கை பக்தர்களிடம் வலுத்துள்ளது.