புதுச்சேரி: பாரதிபுரம் அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று ஆராட்டு நடந்தது.புதுச்சேரி, கோவிந்தசாலை பாரதிபுரம் அய்யப்பன் கோவிலில் பிரம் மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை, மகா கணபதி ஹோமம், 25 கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம், சந்தன அபிஷேகம் மாலை புஷ்பாபிஷேகம் நடந்து வந்தது.உற்சவத்தின் முக்கிய நிகழ்சியான ஆராட்டு எனப் படும் தீர்த்தவாரி, நேற்று புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.