மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களில் வளரும் செடிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2021 01:12
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களில் சுதைகளை பாதிக்கும் வகையில் செடிகள் வளர்ந்துள்ளது பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது.
இக்கோயில் கோபுரங்களின் சுதைகளுக்கு இடையே செடிகள் வளர்ந்து, நாளடைவில் சிறு மரமாக மாறிவிடுகிறது. இதனால் கோபுர கட்டுமானம் பாதிப்போது, சுதைகளும் சேதமடைகின்றன. தற்போது அனைத்து கோபுரங்களிலும் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன. இதுகுறித்து கோயில் இணைகமிஷனர் செல்லத்துரையிடம் கேட்டபோது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது அகற்ற இருவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக கோபுரங்களில் பணிபுரிவது சிரமம். ஓரிரு நாட்களில் அகற்றும் பணி துவங்கும் என்றார்.காற்று, மழை, மண், பறவை எச்சங்களால் கோபுர சுதைகளுக்கு இடையில் விழும் விதைகள் செடிகளாக வளர்கின்றன. அதை அகற்றி மருந்து வைக்கின்றனர். அந்த இடத்தில் மீண்டும் செடி வளராது.