பதிவு செய்த நாள்
03
டிச
2021
04:12
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாணவ, மாணவியருக்கான பகவத்கீதை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் இம்மாதம், பகவத் கீதை ஜெயந்தி கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் 5ம் தேதி, தி.நகர் பர்கிட் சாலையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் சீனியர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள, டேக் ஆடிட்டோரியத்தில், காலை 10:00 மணிக்கு பகவத் கீதை போட்டி நடத்த உள்ளது.இரு பிரிவுகளாக நடத்தப்படும் பகவத் கீதையின் 17வது பிரிவு போட்டியில், 6, 7ம் வகுப்பு மாணவ, மாணவியர் ஏ பிரிவிலும், 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் பி பிரிவிலும் இடம் பெறலாம்.அதேபோல, பகவத் கீதை 18வது பிரிவுக்கான போட்டியில், 18 வயதிற்கு உட்பட்டோர் ஏ பிரிவிலும், 18 வயதிற்கு மேற்பட்டோர் பி பிரிவிலும் பங்கேற்கலாம்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 14ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படும்.மேலும் தகவல்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரை, 94440 19640 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் அறிவித்துள்ளார்.