பதிவு செய்த நாள்
04
டிச
2021
10:12
திருப்பதி : சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது.
இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது. நவ., 18ம் - டிச., 10 வரையிலாத தேதிகளுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. எனவே பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தரிசன தேதியை மாற்றி திருமலை பயணத்தை முடிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பூலோக வைகுண்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, நம்பெருமாள் சௌரிக் கொண்டை, ரத்தினகிளி, ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு திருவாபரணங்கள் தரித்து மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.