மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே சோழமாதேவியில் குங்குமவல்லி அம்மன் குலசேகர ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மடத்துக்குளம் தாலுகா சோழமாதேவியில் விளை நிலங்களுக்கு மத்தியில் குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகர ஸ்வாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இங்கு ஆண்டு முழுவதும் பூஜைகள் நடக்கிறது. முக்கிய நாட்கள். விசேஷங்கள், திரு விழாக்களின் போது சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் வளாகத்தில் யாகம் வளர்த்து ஹோமம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சி றப்பு அலங்காரம் , தீபஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதுகுறித்து அறங்காவலர்கள் கூறியதாவது: "இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ள நிலையில் காலை முதல் மாலை வரை பூஜைகள் நடக்கிறது. பிரச்சனைகள், சிரமங்கள் தீர்வதற்காக பல இடங்களிலிருந்து பக்தர்கள் வழிபட்டுச்செல்கின்றனர். இதுபோல் வந்து, திரும்பும் பக்தர்களுக்காக போதிய ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என தெரிவித்தனர்.