உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச. 19 (ஞாயிறு) அன்று நடக்க உள்ளது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பச்சை மரகத நடராஜர் தனி சன்னதியாக வீற்றிருக்கின்றார்.ஒலி, ஒளியால் எவ்விதபாதிப்பும் ஏற்படாத வகையில் பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனம் பூசப்படுவது வழக்கமாகும்.கடந்தாண்டு பூசப்பட்ட சந்தனம் டிச.19 காலை 9:00 மணிக்கு களையப்பட்டு,மரகத நடராஜர் மீது சந்தனாதி தைலம் பூசப்படும்.பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட 32 வகையான அபிஷேக ஆராதனை தொடர்ந்து நிறைவேற்றப்படும். வருடத்திற்கு ஒருமுறை மூலவர் பச்சை மரகத நடராஜருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருவர். அன்று இரவு 10:00 மணிக்கு மேல் மகா ஆருத்ரா அபிஷேகம் நடக்கும்.மறுநாள் டிச., 20 (திங்கள்) புதிய சந்தனம் காப்பிடப்பட்டு சர்வ மலர் சிறப்பு அலங்காரத்தில், அதிகாலை 5:00 மணிக்கு அருணோதய காலத்தில் சிவகாமி சமேத மரகத நடராஜர் எழுந்தருளுகிறார்.முன்னதாக டிச. 11 அன்று காப்பு கட்டுதலுடன்விழா துவங்க உள்ளது.