திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், தீ தடுப்பு ஒத்திகை, திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில், நேற்று நடந்தது.
ஒத்திகை நிகழ்ச்சியை, கோவில் உதவி ஆணையர் ரமணி துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மலைக்கோவிலில் எவ்வாறு தீ விபத்து ஏற்படும், அப்படி தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.இதுதவிர, இடிபாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் காயமடைந்ததால் அவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.