பதிவு செய்த நாள்
10
டிச
2021
10:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 7ம் நாளான இன்று (10ம் தேதி) நம்பெருமாள் நம்பெருமாள் முத்து சாய் கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்கு பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்கருக்கு சேவை சாதித்தார்.
பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து விழா தொடங்கி, 13ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. பகல் பத்து 7- ம் நாள் இன்று (10ம் தேதி) காலை, நம்பெருமாள் முத்து சாய் கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்கு பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து, புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம் வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். 14ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை திறந்து கடந்து செல்வார்.