தஞ்சாக்கூரில் ஜெய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2021 12:12
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் புதிதாக கட்டப்பட்ட ஜெய பெருமாள் மற்றும் பத்து அவதாரங்கள் உடனான ஆண்டாள் தாயார்,நாகம்மாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர்,மகாமுனிவர் 9 நவகிரகங்கள் அடங்கிய திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாவூரில் ஜெய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 2 கால யாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி நிறைவடைந்து நேற்று காலை10:30 மணிக்கு கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை சுமந்து சென்று கோயிலை சுற்றி வலம் வந்து ஜெய பெருமாள் விமானக் கலசத்திற்கும், திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இவ்விழாவில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா,எம்.எல்.ஏ., தமிழரசி அரசு அதிகாரிகள் மற்றும் தஞ்சாக்கூர் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.கோயில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலரும்,பரம்பரை பூசாரியுமான பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். இன்று தஞ்சாக்கூரில் காலை 10:45 மணிக்கு ஸ்ரீ ஜெகதீஸ்வரன் சித்தர் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. படம் மெயிலில் உள்ளது.