பதிவு செய்த நாள்
10
டிச
2021
04:12
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர்,சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி, சூட்டுக்கோல் செல்லப்பா சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 2 கால யாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி நிறைவடைந்து. இன்று காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை சுமந்து சென்று கோயிலை சுற்றி வலம் வந்து ஜெகதீஸ்வர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோயில் விமானக் கலசத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும் 10:15 மணிக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இவ்விழாவில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் ஜெயகாந்தன், சாய்பாபா கோயில் நிர்வாகி அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், காரைக்குடி கிட்&கிம் கல்லூரி சேர்மன் ஐயப்பன்,பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன்,ஐ.ஓ.பி., வங்கி அதிகாரி இளவழகன்,மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் தஞ்சாக்கூர் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். கோயில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை பூசாரி பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். படம் உள்ளது: 1 எம்என்எம் தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் தீபாராதனை நடைபெற்றது.