திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2021 10:12
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி பிறப்பை முன்னிட்டு நாளை முதல் அதிகாலையில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்காக நடைதிறக்கப்படுகிறது. நாளை கோயில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி 4:30 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து உச்சிக்கால பூஜைகள் காலை 11:30 மணிக்கும் அர்த்தசாம பூஜைகள் இரவு 7:15 மணிக்கும் நடைபெறும். தொடர்ந்து நடை சாத்தப்படும். மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த நடைமுறை ஜன.,13 வரை தொடரும் என்று தேவஸ்தானத்தினர் அறிவித்துள்ளனர்.