உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2021 10:12
திசையன்விளை: உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் அபூர்வநிகழ்வு துவங்கியது. தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்த பெற்றது உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில். பல்வேறு தனி சிறப்புகள் மிக்க இக்கோயிலில் மூலவர் சுயம்புலிங்கசுவாமி மீது சூரிய கதிர்கள் விழும்அபூர்வ நிகழ்வு ஆண்டு தோறும் மார்கழி மாதம் முழுவதும் நடந்து வருகிறது. நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 6:45 மணிக்கு சூரிய கதிர்கள் மூலவர் சுயம்பு லிங்கசுவாமி மீது விழும் அபூர்வ நிகழ்வு துவங்கியது. பத்து நிமிடங்கள் வரைநீடித்த இந்தகாட்சியை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். சூரிய பகவானேசிவபெருமானைபூஜிக்கும் காட்சியாக இதனை பக்தர்கள் கருதுகின்றனர். இந்தநிகழ்வு வரும் மார்கழி 29ம்தேதி வரை தினமும் காலையில் நிகழும் என்பது குறிப்பிடதக்கது.