பதிவு செய்த நாள்
17
டிச
2021
11:12
ஊத்துக்கோட்டை-மார்கழி மாதம் பிறந்த நிலையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் திருப்பாவை பாடல்களை பக்தர்கள் பாடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை, பிராமணர் தெருவில் உள்ளது ஸ்ரீசுந்தரவல்லி தாயார் சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், மார்கழி மாதம் சிறப்பு பூஜை நடைபெறும். மார்கழி மாதம் முதல் தேதியை ஒட்டி, நேற்று விடியற்காலை, கோவில் வளாகத்தில் ஆண்கள், பெண்கள் திருப்பாவை பாடல்கள் பாடினர். இதைத்தொடர்ந்து மூலவர் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இனி வரும் நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல், ஆரணி பேரூராட்சியில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில், விடியற்காலை, மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், பக்தர்கள் விடியற்காலை எழுந்து தங்களது வீட்டின் முன் சுத்தப்படுத்தி, மாக்கோலம் இட்டு, பூசணி பூ வைத்து விளக்கேற்றி வைத்தனர்.