சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி பவனி : டிச.22ல் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2021 01:12
சபரிமலை: மண்டல பூஜை நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி டிச., 22ல் ஆரன்முளாவிலிருந்து புறப்படுகிறது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய இந்த அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி பவனியாக எடுத்து வரப்படும். இந்த ஆண்டு டிச., 26 மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி டிச.,22 காலை 5:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். காலை 7:00 மணிக்கு ஆரன்முளாவில் அங்கி பவனி இருந்து புறப்படுகிறது. முதல் நாள் ஓமலூர் ரத்த கண்ட சுவாமி கோவிலில் தங்கும். டிச.,23 கோந்தி முருங்க மங்கலம் கோயிலிலும், டிச.,24ல் பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும். டிச.,25 மதியம் 1:00 மணிக்கு பம்பை வந்தடையும். மாலை 3:00 மணிக்கு பம்பையில் இருந்து தலைச்சுமையாக சன்னிதானம் கொண்டு வரப்படும். மாலை 6:25 மணிக்கு சன்னிதானம் வரும் தங்க அங்கியை தந்திரி மற்றும் மேல்சாந்தி பெற்று மூலவருக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவார்கள். டிச., 26 -மதியம் நடைபெறும் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அறிவிக்கப்பட்டிருக்கும்.கொரோனா கட்டுப்பாடுகளுடன் தங்க அங்கி பவனி நடத்தப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.