மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் உலக நன்மைக்காக ருத்ர ஜெபம், கலச அபிஷேகம் நடந்தது.
உலக நன்மைக்காக மஹாருத்த மஹாயக்ஞ கமிட்டியாளர்கள் சார்பில் மதுரை லட்சுமி
சுந்தரம் ஹாலில் ருத்ர ஜெபம், கலச அபிஷேகம் நடந்தது. ஏராளமானேர் கலந்து
கொண்டனர். ருத்ரஜபம் செய்வதன் மூலம், சகலவிதமான உலகாயதமான நன்மைகளையும் பெறலாம் என்கின்றனர் ஞானிகள். வேதத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் அடையமுடியும் ருத்ரத்தின் கடைசியாக, `ம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரம் அமைந்துள்ளது. `ம்ருத்யு என்றால் `யமன். யமனை வெல்வதற்கான மந்திரம். இதைச் சொல்வதன் மூலம் யமபயம் நீங்கும்.