புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்ச தீப வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2021 12:12
தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
தஞ்சாவூர், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலையில் 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். வரும் 25ம் தேதி வரை 1 லட்சம் திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற உள்ளது.