புதுச்சேரி:மணக்குள விநாயகர் கோவிலில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும் திருப்பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரியில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 99ம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்த மூன்றுகோடி ரூபா# செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திருப்பணி துவக்க விழா நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி திருப்பணியை துவக்கி வைத்தார். லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., கலெக்டர் தீபக்குமார், இந்து அறநிலையத் துறை ஆணையர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். கோவில் நிர்வாக அதிகாரி ராஜசேகர், அறங்காவல் குழுத் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் தர்மராஜ், செயலர் குணசேகரன், பொருளாளர் ஆனந்தரங்க ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.