பழநி: பழநி பெரிய நாயகி அம்மன் கோயில் திருவாதிரை உற்சவ திருவிழாவை முன்னிட்டு பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி பெரிய மாரியம்மன் கோயிலில் திருவாதிரை விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் பொண்ணூஞ்சலில் எழுந்தருளினார். திருவாசகம் 20 பாடல்கள் பாடி உற்ஸவம் நடைபெற்றது. இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும்.