நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருகோவில் ஆண்டு தோறும் தை மற்றும் மார்கழி மாத தேர் திருவிழாக்கள் 10 நாட்கள் கொண்டாட படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி தேர் தேர்திருவிழா கடந்த 11ம்தேதி கெடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி விதி உலா வருவது மற்றும் மக்கள் மார் சந்திப்பு என கடந்த ஒன்பது நாள்களும் பல்வேறு நிகழச்சிகள் நடைப்பெற்றது. ஒன்பதாம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சுவாமி தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர்.அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதேபோல் பிள்ளையார் தேரே சிறுவர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் குமரியில் மட்டும் அல்லாது கேரளாவிலும் இருந்து பலர் வந்து சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்க பட்டது.