வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மகா புஷ்கரணி விழாவை முன்னிட்டு கங்கா ஆரத்தி விழா நடந்தது.காசியிலும் வீசம் பெற்ற திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.விழாவின் ஒரு பகுதியாக 2023ம் ஆண்டு வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடந்து வருகிறது.நேற்று நடந்த 11வது வார கங்கா ஆர்த்தி விழாவில், மாலை 6.30 மணியளவில் கோவில் தலைமை அர்ச்சகர் சரவணாச்சாரியார் கங்கை நதிக்கு நிகரான சங்கராபரணி நதிக்கு மலர் துாவி தீபாராதனை செய்தார். தொடர்ந்து பவுர்ணமி கிரிவல சிறப்பு அபிேஷகம், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.