ராஜபாளையம்: ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெரு ஸ்ரீ சடை உடையார் சாஸ்தா கோயில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 20வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது. மூலவர் சடை உடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனதாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு முதல் நாள் 108 திருவிளக்கு பூஜை, இரண்டாம் நாள் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை மற்றும் சிறப்பு நிகழ்ச்சியாக சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சடை உடையார் சாஸ்தா திருக்கோயில் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.