பதிவு செய்த நாள்
20
டிச
2021
08:12
அவிநாசி : திருப்பூர் மாவட்டம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மகா அபிஷேகம் நடந்தது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா மஹா தரிசன விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜ பெருமான், சிவகாமி அம்மைக்கு, ஆருத்ரா மஹா தரிசன விழா நடைபெறும். நடப்பாண்டு, காப்பு கட்டுதலுடன்துவங்கி, 26 வரை நடக்கிறது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில், ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பின், நடராஜ பெருமான், சிவகாமியம்மைனுக்கு அபிஷேகம் நடந்தது. வரும், 26 வரை தினமும், அதிகாலை மற்றும் மாலையில், மாணிக்கவாசகர் வீதியுலா, 25ல் மாங்கல்ய நோன்பு நடைபெறுகிறது.