திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2021 11:12
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் நேற்று ஆருத்ரா உற்சவம் நடந்தது.
காரைக்கால் அடுத்த திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த 10நாட்களாக நடத்த ஆருத்ரா உற்சவம் நேற்று நிறைவு பெற்றது.நிறைவு நாளான நேற்று காலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு 16விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை 9.30மணிக்கு கோ பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. காலை 11மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின் ராஜகோபுர தீபாரதனையுடன் சுவாமிகள் 4மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடத்தப்பட்டது. தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊடல் உற்சவம் நடைபெற்றது.
இதில் அம்பாள் நடராஜர் மீது கோபித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று கதவை மூடிக்கொள்வது போன்றும் பின் சுந்தரமூர்த்தி சாமிகள் எழுந்தருளி அம்பாளுக்கும், நடராஜருக்கும் சமாதானம் செய்து வைக்கும் உற்சவம் நடந்தது. சமாதானம் செய்வதிற்காக சாமவேதங்கள் பாடப்பட்டது. பின் சுந்தரமூர்த்தி சாமிகள் சிவகாமி அம்பாளை அழைத்துக்கொண்டு நடராஜரை எதிர்கொண்டு அழைந்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடராஜர், சிவகாமி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் தர்மபுர ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன்,லெனில்பாரதி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.