Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டு யானை நடமாட்டம்: பம்பை - ... மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் பெருவழி பாதையில் பயணிக்கலாம் மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 26ம் தேதி மண்டல பூஜை: தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 26ம் தேதி மண்டல பூஜை:  தங்க அங்கி பவனி நாளை புறப்படுகிறது

பதிவு செய்த நாள்

21 டிச
2021
04:12

சபரிமலை: சபரிமலையில் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜைக்காக நாளை காலை ஆரன்முளாவிலிருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது.

கார்த்திகை ஒன்றாம் தேதி சபரிமலையில் தொடங்கிய மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தினமும் ஐயப்பனை தரிசிக்க நீண்ட கியூ காணப்படுகிறது. பிரசாதம் வாங்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். வரும் 26ம் தேதி பகல் 11:50 முதல் 1:15 மணிக்கு உட்பட்ட முகூர்த்தத்தில் மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ சித்திரை திருநாள் மகாராஜா தங்க அங்கி காணிக்கையாக வழங்கியிருந்தார். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி நாளை காலை பவனியாக எடுத்து வரப்படுகிறது.

நாளை அதிகாலை 5:00மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் தங்க அங்கி 7:00 மணிக்கு சபரிமலை கோயில் மாதிரியில் வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் புறப்படும். 25-ம் தேதி பகல் 1:00 மணிக்கு பம்பையிலும், மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியிலும் வந்தடையும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அணிவிக்கப் பட்டிருக்கும்.

இதையொட்டி சபரிமலை மற்றும் பம்பையில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீசன் தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பம்பை ஆற்றில் தற்போது குறைந்த அளவு தண்ணீரே செல்வதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்குவதற்காக 150 கூடுதல் பஸ்கள் வரவழைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இன்று மாலை 4:00 ... மேலும்
 
temple news
கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாகக் ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டலகாலம் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar