பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
கம்பம் : க.புதுப்பட்டி விளியல்கல்ராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விளியல்கல்ராயப் பெருமாள் கோயில் கோயில் சுரபி நதிக் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த பரம்பரை அறங்காவலர்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும் முடிவு செய்தனர். அதன்படி கோயில் திருப்பணிகள் முடிந்து, கடந்த 2 ந் தேதி துவங்கி யாக சாலை பூஜைகள், வேள்விகள் நடைபெற்றது.கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி, நீளா, மதுரவல்லி நாயிகா சமேத விளியல்கல்ராயப் பெருமாள், ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணன், நம்மாழ்வார், ஸ்ரீமத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள சன்னதிகளுக்கு மேல் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோவிந்தா கோஷம் விண்ணைப்பிளந்தது.கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகி சிவாஜிமோகன் மற்றும் பரம்பரை அறங்காவலர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.