ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாள் விழாவான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி (வேடுபரி) வையாளி கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சொர்க்கவாசல் திறப்புக்கு பின் ராப்பத்து உற்சவம் துவங்கியது. ராப்பத்து உற்சவத்தின் ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி (வேடுபரி) வையாளி கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் டிசம்பர் 23-ம் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி வைகுந்த ஏகாதசியின் மிக முக்கியமான நிகழ்ச்சியான நம்மாழ்வாhக்கு மோட்சம் தந்தருளும் வைபவமும் நடைபெற உள்ளது. பின் இயற்பா சாற்றுமுறையுடன் வைகுந்த ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து, உதவி ஆணையர் திரு.கந்தசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.