பதிவு செய்த நாள்
22
டிச
2021
05:12
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் நிரந்தர தங்கும் கூடங்களை பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்த அனுமதிக்கபட்டுள்ளது.
பழநி மலைக்கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மார்கழி முதல் தேதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கியுள்ளனர். பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் தங்கி இளைப்பாற கட்டணமில்லா நிரந்தர பாதயாத்திரை தங்குமிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தங்கும் கூடங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை, வசதிகள் உள்ளன. அவை தருமத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், குழந்தை வேலப்பர் திருக்கோயில். ஒட்டன்சத்திரம், ராம்கோ மண்டபம், ஒட்டன்சத்திரம், அடையாள வேல் மண்டபம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கொங்கூர், கொமரலிங்கம், ஊதியூர், கனவாய்பட்டி ஆகிய 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பக்தர்கள் இரவு நேர பாதயாத்திரை மேற்கொள்ளும் போது வாகன ஓட்டிகளை ஏச்சரிக்கும் ஒளிரும் பட்டைகள், கைவிளக்கு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். பக்தர்கள் குழுவாவும், பாதுகாப்பாகவும் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும். என பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.