ஸ்ரீரங்கம் இராப்பத்து ஒன்பதாம் நாள்: வைர அபய ஹஸ்தத்தில் நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2021 05:12
திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து ஒன்பதாம் நாள் விழாவில் நம்பெருமாள் பனிக்குல்லாயில் ஒரு புஜகீர்த்தியுடன் , மகர கர்ண பத்திரம், வைர அபய ஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், பெரிய பிராட்டி பதக்கம், ரங்கூன் அட்டிகை, பவழ மாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8வட முத்து சரம், அடுக்கு பதக்கங்கள், ஹஸ்தத்தில் சுட்டிப்பூ தொங்கல் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
வரும் மார்கழி 9¸ வெள்ளிக்கிழமை¸ 24-12-2021 அன்று ஸ்ரீரங்கம் திருவத்யயன உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான (வைகுந்த ஏகாதசியின்) "நம்மாழ்வர் மோட்சம்" காலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபமான திருமாமணி மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்று மூலஸ்தான சேவை நேரம் பிற்பகல் 2.30 முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே. மேலும் பரமபதவாசல் திறப்பு இன்றும் 22-12-2021 மற்றும் நாளை 23-12-2021 மட்டுமே. மீண்டும் அடுத்த வைகுந்த ஏகாதசி அன்று தான் திறக்கப்படும்.