அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில்அகஸ்தியர் சிலை பெயர்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பாசமுத்திரத்தில் இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டின் கீழ் உள்ளதிருமூலநாதசுவாமி கோயில் வெளி பிரகாரத்தில் சித்தர் பீடத்தில் இருந்த அகஸ்தியர் கல்சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு, சாக்கு மூடைக்குள் வைக்கப்பட்டு பிரகாரத்தில் கிடந்தது. நேற்று முன்தினம் காலை மார்கழி பூஜைக்கு சென்ற பெண்கள் இதை பார்த்து தகவல் தெரிவித்தனர். இத்தகவல் கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று அகஸ்தியர் சிலையை மீண்டும் நிறுவி, சித்தர் பீடத்தில் கேட்போடும் பணி நடந்தது. இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.