அவிநாசி : சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா நடந்தது.சேவூரில் முத்துக் குமாரசாமி ஜீவசமாதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்தொடர்ச்சியாக, பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் நடந்து, மஹா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின், பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.