பதிவு செய்த நாள்
23
டிச
2021
04:12
சென்னை: மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா இன்று(டிச.,23) துவங்குகிறது; ஜன., 23 வரை நடக்க உள்ளது.
விழாவில், அமைச்சர்கள் அன்பரசன், மதிவேந்தன், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர். விழாவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர், ஒரே மேடையில் பார்க்கும் வகையில், முக்கிய நடன மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இன்று துவங்கும் நாட்டிய விழாவில், 90க்கும் மேற்பட்ட இந்திய நடன நிகழ்ச்சிகள், தொகுத்து வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்திய நாட்டியங்களில் புகழ்பெற்ற பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்றவை நடத்தப்படும். புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாட்டிக் கலைஞர்களுக்கு, இந்த நாட்டிய விழாவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.