ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா ஆலயத்தில் தோமா திருநாள் நடந்தது. குருசேகர தலைவர் பால் தினகரன் தலைமை வகித்தார். அருள்திரு முனைவர். ஞானவரம் இசை வழி நற்செய்தி அருளினார். இரவு சபை மக்களுக்கு அன்பின் ஐக்கிய விருந்து நடந்தது. ஏற்பாடுகளை கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.