Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பம்பையில் இருந்து மலையேற ... அய்யப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு: நாளை மண்டல பூஜை அய்யப்பனுக்கு இன்று தங்க அங்கி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து நாளை மாலை தீபாராதனை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து நாளை மாலை தீபாராதனை

பதிவு செய்த நாள்

24 டிச
2021
04:12

சபரிமலை: சபரிமலையில் நாளை மாலை 6.30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறுகிறது. 26ம் தேதி மதியம் மண்டல பூஜை நடைபெறும்.

2021-ம் ஆண்டுக்கான மண்டல காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி நாளை காலை ராந்நி பெருநாடு சாஸ்தா கோயிலிலிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும். பம்பையில் பக்தர்கள் தரிசனத்துக்கு பின்னர் மாலை 3:00 மணிக்கு தலை சுமடு மூலம் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும். ஐயப்பா சேவா சங்க கேரள மாநில துணைத் தலைவர் ஹரி தாசன் நாயர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் அங்கியை சுமந்து வருகின்றனர். இதில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மோகனசுந்தரம்- நாமக்கல், செந்தில்குமார் - விழுப்புரம், சந்திரசேகர் - ஊட்டி, செல்வராஜ்- மதுரை.

மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர். ஸ்ரீ கோயில் முன்பு வந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் அங்கியை பெற்று நடை அடைத்த பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெறும். 26ம் தேதிபகல் 11.50 முதல் 1.15 மணிக்கு உட்பட்ட முகூர்த்தத்தில் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். மதியம் நடை அடைத்த பின்னர் மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை,அத்தாழ பூஜைக்குப் பின்னர் இரவு 9:50 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுவதுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவுபெறும்.

தங்க அங்கி வருகை மற்றும் மண்டல பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்க பட்டுள்ளதாக தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் வாரியார் கூறினார். பக்தர்களுக்கு பிரசாதங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இன்று மாலை 4:00 ... மேலும்
 
temple news
கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாகக் ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டலகாலம் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar