பதிவு செய்த நாள்
07
ஜூலை
2012
10:07
உடன்குடி:வனத்திருப்பதி கோயிலில் மூன்றாவது வருஷாபிஷேக விழா விமர்சையாக நடந்தது.வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் மூன்றாவது வருஷாபிஷேக விழாவையொட்டி கடந்த ஜூன் 5ம் தேதி முதல் கால யாகபூஜையுடன் துவங்கியது. நேற்று கோ பூஜையுடன் நடைதிறக்கப்பட்டு இரண்டாம் கால யாகபூஜை துவங்கியது. அதை தொடர்ந்து அலங்காரமும் நடந்தது. இதில் வேலூர் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி, ஆற்காடு கலவை சச்சிதானந்த சுவாமி, ஓட்டல் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால், சென்னை ஆடிட்டர் சங்கரன், சென்னை டாக்டர் ராஜா, வேங்கடகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் வனத்திருப்பதியானுக்கு ஊஞ்சல் சேவையையும், தொடர்ந்து மேள தாளத்துடன் நவசக்தி விநாயகர், ஸ்ரீநிவாசபெருமாள் ராஜகோபால் சுவாமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வடபழநி ஆண்டவர், வாரியார் சுவாமிகளுடன், நாககன்னியப்பன் ஆகிய உற்சவ மூர்த்திகள் திருவீதி உலாவும், வண்ண வாண வேடிக்கையும், லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இசை கச்சேரியும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஓட்டல் சரவணபவன் பங்குதாரர் சரவணன் தலைமையில் தலைமை வர்த்தக அதிகாரி கணபதி, பொது மேலாளர்கள் ஆறுமுகம், வாசு, சுப்பிரமணியராவ், செல்வராஜ், கணேசன், செல்வராஜ், கோயில் மேலாளர் வசந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.