திண்டிவனம்:திண்டிவனம் இலுப்ப தோப்பில் உள்ள நாகமுத்துமாரிம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.விழாவையொட்டி நேற்று காலை விக்னேஷ்வரர் பூஜை ,கணபதி ஹோமம், கோ பூஜை ஆகியவை நடந்தன. மாலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன.இன்று காலை, மாலை மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை 6.30 மணிக்கு நான்காம் காலை யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணிக்கு கோவில் பரிவார மூர்த்திகளுக்கும், 9.15 மணிக்கு கோவில் விமானத்திற்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.இதனையடுத்து 9.30 மணிக்கு நாகமுத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.