Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை ... பெருவழிப்பாதை: எருமேலி வழியில் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி பெருவழிப்பாதை: எருமேலி வழியில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை நடை திறந்தது: பெருவழிபாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறந்தது: பெருவழிபாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

31 டிச
2021
10:12

சபரிமலை, டிச.31– 20 நாட்கள் நடைபெறும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. பெருவழிப்பாதையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மண்டலபூஜை முடிந்து கடந்த 26–ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் இணைந்து சன்னிதானம் மற்றும் பம்பை சுற்றுப்புறங்களை துாய்மை படுத்தினர். பிரசாதம் தயாரிக்கும் பணியும் இடைவெளியின்றி நடைபெற்றது. நேற்று மதியம் ஸ்ரீகோயில் மற்றும் 18 படிகள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18 படிகள் வழியாக இறங்கி சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார். நேற்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஊழியர்கள் மட்டுமே காணப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம் நடத்தப்பட்டு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷகத்தை தொடங்கி வைப்பார்.


பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மகரவிளக்கு நாள் வரை உதயாஸ்தமன பூஜை மற்றும் படிபூஜை கிடையாது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. எல்லா நாட்களிலும் காலை 11.30 மணி வரை நெய்யபிேஷகம் நடைபெறும். 12:00 மணிக்கு களபபாபிேஷகம் நடைபெறும். மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் ஜன., 11, பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்பாடு 12 தேதிகளில் நடைபெறும். 13–ல் சுத்திகிரியைகள் நடைபெறும். 14–ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறும். பெருவழிப்பாதை: கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பெருவழிப்பாதை இன்று முதல் திறக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5:30 முதல் காலை 10:30 வரை எருமேலியில் இருந்து இந்த பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அழுதை, முக்குழியில் பகல் 12:00 வரை அனுமதி உண்டு. இங்கு பக்தர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். பக்தர்கள் தனியாக வந்தாலும் அவர்கள் குழுக்களுடன் இணைத்து அனுப்பப்படுவார்கள். மாலை 5:00 மணிக்கு பின்னர் பயணிக்க முடியாது. வலியான வட்டம், கரிமலை, கல்லிடும்குன்று ஆகிய இடங்களில் தங்கும் வசதி உண்டு. வனத்துறை சார்பில் எட்டு இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. முக்குழி மற்றும் கரிமலையில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மாம்பாடி, கல்லிடும்குன்று, கரியிலாம்தோடு, மஞ்சள்பொடிதட்டு ஆகிய இடங்களில் மருத்துவ உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரண்டாம் தேதி வரை கேரளாவில்இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருந்தாலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இன்று மாலை 4:00 ... மேலும்
 
temple news
கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாகக் ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டலகாலம் என்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar