பெருவழிப்பாதை: எருமேலி வழியில் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2021 03:12
சபரிமலை: 20 நாட்கள் நடைபெறும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. பெருவழிப்பாதையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பெருவழிப்பாதை இன்று முதல் திறக்கப்பட்டது. தினமும் அதிகாலை 5:30 முதல் காலை 10:30 வரை எருமேலியில் இருந்து இந்த பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அழுதை, முக்குழியில் பகல் 12:00 வரை அனுமதி உண்டு. இங்கு பக்தர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். பக்தர்கள் தனியாக வந்தாலும் அவர்கள் குழுக்களுடன் இணைத்து அனுப்பப்படுவார்கள். மாலை 5:00 மணிக்கு பின்னர் பயணிக்க முடியாது. வலியான வட்டம், கரிமலை, கல்லிடும்குன்று ஆகிய இடங்களில் தங்கும் வசதி உண்டு. வனத்துறை சார்பில் எட்டு இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. முக்குழி மற்றும் கரிமலையில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மாம்பாடி, கல்லிடும்குன்று, கரியிலாம்தோடு, மஞ்சள்பொடிதட்டு ஆகிய இடங்களில் மருத்துவ உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரண்டாம் தேதி வரை கேரளாவில்இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருந்தாலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.