பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராம சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இக்கோயிலில் டிச., 29 ல் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. தினமும் மாலை உற்சவர் ஆஞ்சநேய மூர்த்தி கோயில் உள்பிரகாரத்தில் பக்தி உலா, பஜனை நடக்கிறது. ஜன. 2 நாளை அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது. பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு அபிஷேகம் மாலை உற்சவர் வீதி உலா நடக்கிறது. நாளை 108 கலச அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடக்க உள்ளது. வண்டியூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழாவையொட்டி, பால்குடம் எடுக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.