நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2022 12:01
நாமக்கல்: நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்டு வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில், 18 அடி உயரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்ட மாலை சுவாமிக்கு சாத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (2ம் தேதி) ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதையொட்டி நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அன்னதான மண்டபத்தில் தொடங்கியது. 1 லட்சத்து 8 வடை மாலையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, மதி வேந்தன் எம்.பி. ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கலெக்டர் ஸ்ரேயா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.