பதிவு செய்த நாள்
02
ஜன
2022
12:01
திருவண்ணாமலை: ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சம்பந்த விநாயகர் மற்றும் மூலவருக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டு கிரிவலம் சென்றனர். மேலும் திருவண்ணாமலையில், பூதநாராயணன் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், இஞ்சிமேடு சிவன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.