பதிவு செய்த நாள்
03
ஜன
2022
11:01
வடவள்ளி: வடவள்ளியில் உள்ள, ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடந்தது. வடவள்ளியில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை, 6:30 மணிக்கு மார்கழி மாத பூஜையும், லட்சார்ச்சனையும் நடந்தது. பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு, பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர், முத்தங்கி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, பிரத்யங்கிரா தேவிக்கு, நிகும்பளா யாகம் நடந்தது. அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.