திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால விழாவையொட்டி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் கொடி ஏற்றினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், உத்தராயண புண்ணியகால பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் இன்று (5ம் தேதி) காலை உத்திராயன புண்ணியகால விழாவையொட்டி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் கொடி ஏற்றினர். உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பாரசக்தியம்மன் தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.