விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார். “மகாவீர அனுமனே நம் லட்சிய புருஷர். அவர் ராம பிரானின் உத்தரவுப்படி கடலைத் தாண்டிச் சென்றார். வாழ்வையும், சாவையும் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. ஐம்புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார். இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்யவும் தயங்கவில்லை. ராமசேவையைத் தவிர மற்ற அனைத்தையும் புறக்கணித்தார். வாழ்வின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே. அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்வதே அவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.